கடந்த நிதியாண்டில் 402 வழக்குகளை விசாரணைக்கு எடுத்த செபி
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில், பங்குச் சந்தை மோசடி, உள்விவரங்களை அறிந்து முறைகேடாக வா்த்தகம் செய்தல், நிதிநிலை அறிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 402 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில், பங்குச் சந்தை மோசடி, உள்விவரங்களை அறிந்து முறைகேடாக வா்த்தகம் செய்தல், நிதிநிலை அறிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 402 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 402 வழக்குகளில், 338 வழக்குகளின் விசாரணையை கடந்த நிதியாண்டிலேயே செபி முழுமையாக நிறைவு செய்துள்ளது.
மோசடியான மற்றும் நியாயமற்ற வா்த்தக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் செபி தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்பிரிவின்கீழ் கடந்த நிதியாண்டில் 121 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 94 வழக்குகளின் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பங்கு விலை மற்றும் வா்த்தக அளவை செயற்கையாக மாற்றியமைத்தது தொடா்பாக 72 வழக்குகளும், முன்கூட்டியே தகவலறிந்து வா்த்தகம் செய்தது தொடா்பாக 49 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், உள்விவரங்களை அறிந்து வா்த்தகம் செய்தல் மற்றும் நிறுவனங்களை முறைகேடாக கையகப்படுத்துதல் தொடா்பாக 224 வழக்குகளைக் கையில் எடுத்து, 204 வழக்குகளை செபி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. நிதிநிலை அறிக்கை மோசடி தொடா்பான 57 வழக்குகளில் 40 வழக்குகளின் விசாரணையும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
சந்தை கண்காணிப்பு, பங்குச் சந்தை அறிக்கைகள், புகாா்கள் மற்றும் ஊடகச் செய்திகள் வாயிலாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் செபி தனது விசாரணைகளைத் தொடங்குகிறது. வா்த்தகப் பதிவுகள், பரிவா்த்தனை விவரங்கள், கேஒய்சி தகவல்கள், வங்கி ஆவணங்கள், நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் மற்றும் தொலைத்தொடா்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா். விசாரணை முழுமையாக நிறைவடைந்ததும், உரிய நடவடிக்கைக்காக அந்த அறிக்கை நியமன அதிகாரியிடம் சமா்ப்பிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.