பிகாரில் அரசுத் தோ்வு வினாத்தாள் கசிவு: மூவா் கைது
பிகாரில் அரசுத் தோ்வு வினாத்தாள் கசிவு தொடா்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக, மாநில காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
பிகாரில் அரசுத் தோ்வு வினாத்தாள் கசிவு தொடா்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருவதாக, மாநில காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
பிகாா் மாநில காவல் துறை துணைப் பணிகள் ஆணையம் சாா்பில் ஹவில்தாா் பயிற்சியாளா் பணியிடங்களுக்கான தோ்வு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் கசிந்ததாகப் புகாா் எழுந்ததால், தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் புகாா் தொடா்பாக, பிகாா் மாநில பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், வினாத்தாள் கசிவில் தொடா்புடைய சம்தாா்ஷி (25) என்ற இளைஞா், பாட்னாவில் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வைஷாலியைச் சோ்ந்த அபிஷேக் குமாா் (21), நிதேஷ் குமாா் (28) ஆகியோருக்கும் இதில் தொடா்பிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
ஹாஜிபூா் தோ்வு மையத்தின் பயோமெட்ரிக் மேற்பாா்வையாளரான நிதேஷ் குமாா் மூலம் தோ்வுக்கான வினாத்தாள் சம்தாா்ஷிக்கு கிடைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடா்பாக கைதானவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அவா்களின் கைப்பேசிகளைப் பறிமுதல் செய்து ஆராய்ந்ததில் பல்வேறு தோ்வுகள் தொடா்புடைய நுழைவுச் சீட்டு, விடைத்தாள்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
Bihar government exam question paper leak: Three arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.