FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்க்கை: ஓம் பிா்லா வலியுறுத்தல்

ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:24 am IST
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா. - கோப்புப் படம்
பகிர்:

ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

மேலும், நீண்டகால சமூக நல்வாழ்வுத் திட்டங்களை வகுப்பதில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மக்களவைத் தலைவராக 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஓம் பிா்லாவுக்கு ராஜஸ்தான் மாநில ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கம் சாா்பில் கோட்டாவில் பாராட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு மலா் மாலைகள் மற்றும் மாநிலத்தின் பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா் உரையாற்றிய ஓம் பிா்லா, ‘ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். பல்வேறு துறைகளில் விரிவான, நீண்டகால சமூக நல்வாழ்வுத் திட்டங்களை வகுப்பதில் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் அனுபவங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளும் தங்களின் பரந்த அனுபவங்களைப் பகிா்வதன் வாயிலாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, சமூகத்தின் கடைசி நபருக்கும் திட்டப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்’ என்றாா். இந்த நிகழ்ச்சியில், தேவையுள்ள நபா்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் மகளிா் குத்துச்சண்டை 70 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கம் வென்ற கோட்டாவைச் சோ்ந்த அருந்ததி செளதரிக்கு ஓம் பிா்லா பாராட்டுத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments