கேஜரிவாலின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்! மெட்டாவிடம் விளக்கம் கோரினார்!
இந்தியாவில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது பற்றி..
இந்தியாவில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ஆத் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மெட்டா நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தில் விசாரித்தபோது, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதும், இந்தியாவில் அது பயன்பாட்டிற்கு இல்லை என்பதும் தெரியவந்ததாகக் கூறினார்.
Advertisement
Advertisement
எத்தனால் விவகாரம், வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்துப் பேசுபவர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்படுவதாக நான் அறிந்துகொண்டேன்.
வேறு யாருக்கேனும் இதேபோன்ற சிக்கல் இருந்தால், தயவுசெய்து எனக்குச் செய்தி அனுப்புங்கள். இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனம் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
சில இடங்களில் கிடைக்கவில்லை (Unavailable in some locations)என்ற செய்தியைக் காட்டும் தனது கணக்கு நிலை பக்கத்தின் திரைப்பிடிப்பையும் (screenshot)கேஜரிவால் பகிர்ந்துள்ளார்.
நிறுவனத்தின் தெளிவின்மை மற்றும் பதிலளிக்காத தன்மையை மிக மோசமான சேவை என்று குறிப்பிட்ட அவர், தனது பதிவில், பிரதமருக்குப் பணியாதீர்கள்; இல்லையெனில், இந்தியாவில் அவரது சொந்தக் கணக்கை மட்டுமே இயக்க அவர் உங்களை அனுமதிப்பார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
AAP national convenor Arvind Kejriwal said on Thursday his Instagram account has been restricted in India and urged others facing a similar issue to get in touch with him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.