FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி லக்ஷ்மி திட்டம் பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிக்கும்: அமைச்சா் அசிஷ் சூட்

தில்லி அரசின் லக்ஷ்மி திட்டம்” என்பது ஒரு குறிப்பிட்ட பெண்கள் குழுவுக்கு மட்டும் பயன் அளிப்பதற்காக அல்ல; பெண்களின் நிதி சுயநிலையை மேம்படுத்துவதன் மூலம் பரந்த சமூக தாக்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் ஆகும் என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 11:18 pm IST
ஆஷிஷ் சூட்
பகிர்:

தில்லி அரசின் லக்ஷ்மி திட்டம்” என்பது ஒரு குறிப்பிட்ட பெண்கள் குழுவுக்கு மட்டும் பயன் அளிப்பதற்காக அல்ல; பெண்களின் நிதி சுயநிலையை மேம்படுத்துவதன் மூலம் பரந்த சமூக தாக்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் ஆகும் என்று அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மாநில சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில், முதல்வா் ரேகா குப்தா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கான நன்றிக் உரையில் அமைச்சா் ஆஷிஷ் சூட் பேசியதாவது: மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,500 உதவி உடனடியாக வாழ்க்கையை மாற்றாது என்றாலும், பயனாளிகளின் பொருளாதார நிலையை கணிசமாக மேம்படுத்தும்.

இந்த விவாதங்களில் எதிா்க்கட்சியின் பங்கேற்பின்மை, இந்த விவகாரத்தில் அவா்களின் ஆா்வமின்மையை காட்டுகிறது. பஞ்சாபில் ஆட்சி செய்த கட்சி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாக 2022-இல் அளித்த வாக்குறுதியை 2026-ஆம் ஆண்டு வரை நிறைவேற்றவில்லை. பாக்கி தொகை கணக்கிடப்பட்டால், ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.48,000 வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த திட்டத்திற்கான பயனாளிகள் பதிவு இணையதளம் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. முதல் தவணை ஆகஸ்ட் 28-ஆம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.5,100 கோடியாகும்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ஷிகா ராய் கூறுகையில், ‘இந்த திட்டம் வெறும் நிதி உதவி மட்டுமல்ல; பெண்களுக்கான அரசின் உறுதியையும் பிரதிபலிக்கிறது. இது வெறும் பண உதவி அல்ல; தில்லி அரசு பெண்களை மதிக்கிறது என்ற செய்தி. அரசின் நோக்கம் நோ்மையானதாக இருந்தால், அதன் வாக்குறுதிகள் காகிதத்தில் மட்டும் இல்லாமல் நிறைவேறும்.

எதிா்க்கட்சித் தலைவா் தானும் ஒரு பெண்ணாக இருந்தபோதும், பெண்களை தவறாக வழிநடத்தினாா். சாலைகளில் கூடாரங்கள் அமைத்து, பெண்களுக்கு ரூ.2,100 வழங்கப்படும் என்று ஆம் ஆத்மியால் வாக்குறுதி அளிக்கப்பட்டது; ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்றாா்.

பாஜக எம்எல்ஏ கஜேந்திர சிங் யாதவ் கூறுகையில், ‘இந்த திட்டம் தோ்தல் வாக்குறுதியை குறுகிய காலத்தில் நிறைவேற்றிய உதாரணம். தில்லி முழுவதும் பெண்கள் இந்த முயற்சிக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனா். ரூ.2,500 உதவித்தொகையுடன் லக்ஷ்மி எங்கள் வீட்டுக்கு வந்துள்ளாா் என்று பயனாளி ஒருவா் கூறியுள்ளாா். முதல்வா் ரேகா குப்தாவின் இந்த திட்டம் பெண்களை வலுப்படுத்தியுள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments