FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘நீங்கள் பேட்மேனா?’.. ஜென்ஸீக்களின் கேள்விகளுக்கு ராகுல் ‘கலகல’ பதில்!

ஜென்ஸீக்களின் கேள்விகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலகலப்பாக பதிலளித்ததைப் பற்றி...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 9:54 pm IST
ஜென்ஸீக்களுடன் ராகுல்.
பகிர்:

ஜென்ஸீக்களின் கேள்விகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலகலப்பாக பதிலளித்தார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி, வியாழக்கிழமை இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'என்னிடம் எதையும் கேளுங்கள் - Ask Me Anything' நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேட்மேன், மீம்ஸ்கள், நாய்கள் மற்றும் மாணவர் போராட்டங்கள் என ஜென்ஸீ இளைஞர்களும், மாணவர்கள் பலரும் தங்களது கேள்வியை எழுப்பியிருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில் ஒருவர் நீங்க பேட்மேனா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்திருந்த ராகுல்காந்தி, “என்னையும் பேட்மேனையும் ஒரே அறையில் இதுவரை யாரும் பார்த்ததில்லை” எனக் கிண்டலாக பதிவிட்டார்.

சமீபகாலமாகவே ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்றான பேட்மேனின் அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருப்பதாக ஜென்ஸீ இளைஞர்கள் கூறிவரும் சூழலில் ராகுலின் பதிலும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொரு அரசும் மாணவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த மாத மாணவர் போராட்டங்களில் தனக்குப் பிடித்த மீம் எது என்று ஜென்ஸீ ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

பேட்மேனை மட்டும் பதிலளிக்காமல், பிரதமர் மோடியையும் சீண்டிய ராகுல், “பிரதமர் இல்லத்திலிருந்து நள்ளிரவில் ஒரு விடியோ வெளியானது, அந்த விடியோவில் மிகவும் பதற்றமான பிரதமரைப் பார்த்தது மிகவும் நகைச்சுவையாக இருந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாருடைய தத்துவங்கள் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல், “கௌதம புத்தர், குருநானக், பசவண்ணா, பிர்சா முண்டா, பெரியார், மகாத்மா பூலே, நாராயண குரு, அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

summary

Rahul Gandhi used an Instagram AMA to answer questions on protests, memes, pets and philosophy. The exchange showed how political leaders are sharpening their digital outreach to younger audiences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments