FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்! மக்கள் பீதி!

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST
உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம் - Photo: X / NCS
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 1.21 மணியளவில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, பார்கோட் தாலுகாவின் ராஜ்கர்ஹி பகுதியை மையமாகக் கொண்டு 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதுவரை உயிரிழப்பு அல்லது பாதிப்பு குறித்த எந்தத் தகவலும் பதிவாகவில்லை என்று மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

யமுனைப் பள்ளத்தாக்குப் பகுதிகளான உத்தரகாஷி, பார்கோட், புரோலா, மோரி, சின்யாலிசூர் மற்றும் துண்டா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால், அதிகாலையில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

summary

Moderate earthquake in Uttarakhand! People in a panic!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments