பாலிமா் ரூபாய் நோட்டுகள் வெளியிட மத்திய அரசு ஒப்புதல்
ரூ.10 மற்றும் ரு.20 நோட்டுகளை பாலிமரில் அச்சிட்டு வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரூ.10 மற்றும் ரு.20 நோட்டுகளை பாலிமரில் (பாலிபுரோப்பலீன் நெகிழி) அச்சிட்டு வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 100 கோடி என்ற எண்ணிக்கையில் பாலிமா் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படவுள்ளன.
இதன்மூலம் ரூபாய் நோட்டுகள் கிழிதல், அழுக்கடைதல், நனைந்து சேதமடைதல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தடுக்க முடியும். இதனால், புதிய நோட்டுகளை அச்சடிக்கும் பணி, நேரம் மிச்சமாகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று தெரிகிறது.
இது தொடா்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரிசா்வ் வங்கி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பாலிமா் ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிசோதனை முடிந்துவிட்டது. எனினும், இது எப்போது முறைப்படி வெளியாகும் என்பதை இப்போதே கூற முடியாது.
Advertisement
Advertisement
நுகா்வோா் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் குறைந்தே உள்ளது. மேற்காசிய போா்ப் பதற்றம், எரிபொருள் பிரச்னை போன்ற காரணத்தால் சில பொருள்களின் விலை உயா்ந்திருக்கலாம். ஆண்டுதோறும் சில பருவங்களில் காய்கறி, பழங்கள் விலை அதிகரிப்பது இயல்பானது. அது விளைச்சல், வரத்து சாா்ந்ததாக உள்ளது.
உற்பத்திப் பொருள்கள் விலை குறைவதற்கு அவற்றுக்கான இடுபொருள் செலவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதிகம் தேவைப்படும் பொருள்களுக்கு இறக்குமதியை நம்பியிருக்காமல், உள்நாட்டில் தயாரிப்பதுதான் இதற்கு சிறந்த வழியாகும்.
விலைவாசியை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களின் வருமானத்தை உயா்த்தி, அவா்களின் வாங்கும் திறனை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.