FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஊழல் வழக்கில் முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் உள்பட 6 பேர் கைது!

தில்லி குடிநீர் வாரிய ஊழல் வழக்கில் முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 10:58 pm IST
முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் குமார் ஜெயின்
பகிர்:

தில்லி குடிநீர் வாரிய ஊழல் வழக்கில் முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லி குடிநீர் வாரியத்தின் கீழ் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கான ஒப்பந்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக தில்லி அரசின் கண்காணிப்பு இயக்குநரகம் அளித்த புகாரின் பேரில் மே 11, 2024 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், யூரோடெக் என்விரான்மென்ட் என்கிற தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக காவல் இணை ஆணையர் விக்ரம்ஜித் சிங் தெரிவித்தார். இதில், ஒப்பந்த முறையில் அந்நிறுவனத்துக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

Advertisement

Advertisement

அந்நிறுவனத்துக்கு சாதகமான ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை மாற்றியமைத்ததாகக் கூறப்படும் நிலையில், இதற்கு அரசு நிர்வாகிகளுக்கும் தனியார் நபர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

மேலும், சுத்திகரிக்கட்ட கழிவுநீர் தொடர்பான முன்னோடி ஆய்வு நடத்தப்படாமல், அதற்கான அத்தியாவசிய அளவுகோல்கள் தவிர்க்கப்பட்டு, தொழில்நுட்ப விவரக்குறிப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் அரசுக்கு கணிசமான நிதி இழப்பு ஏற்பட்டதாக காவல் இணை ஆணையர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், நிதி தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதில் ஸ்ரீஜன்ஹர் மற்றும் ஏஎன் எண்டர்பிரைசஸ் போன்ற இடைத் தரகர்கள் வழியாக லஞ்சப்பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாக விக்ரம்ஜித் சிங் தெரிவித்தார்.

ஊழல் தடுப்புப் பிரிவின் தகவலின்படி, யூரோடெக் என்விரான்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சாதகமான முறையில் சில கட்டுப்பாட்டு நிபந்தனைகள் மாற்றியமைக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் குமார் ஜெயின், டெல்லி குடிநீர் வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி உதித் பிரகாஷ் ராய், முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவாஸ்தவா, ஏஎன் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நாகேந்திர யாதவ், Eயூரோடெக் என்விரான்மென்ட் உரிமையாளர் ராஜா குமார் குர்ரா மற்றும் ஸ்ரீஜன்ஹர் உரிமையாளர் பங்கஜ் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் ஊழல் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றது.

summary

Six people, including a former Aam Aadmi Party minister, have been arrested in the Delhi Jal Board corruption case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments