என் அனுமதியின்றி எந்த சிகிச்சையும் தொடங்கக்கூடாது! சோனம் வான்சுக் மனைவி
என்னுடைய அனுமதியின்றி எந்த சிகிச்சையும் தொடங்கக்கூடாது என்று சோனம் வான்சுக் மனைவி தெரிவித்தது பற்றி...
என்னுடைய அனுமதியின்றி எந்த சிகிச்சையும் தொடங்கக்கூடாது என சோனம் வான்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ சனிக்கிழமை (ஜூலை 18) தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர்.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ பேசியதாவது:
அவர் (சோனம் வாங்சுக்) சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. என்னுடைய ஒப்புதல் இல்லாமல் அவருக்கு எந்த சிகிச்சையையும் தொடங்கக்கூடாது. தவறாக ஏதேனும் நடந்தால் அதற்கு அனைவரையும் பொறுப்பேற்க வைப்பேன்.
நேற்று அவர் நலமாக இருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய தேவை இல்லை. அரசியலைப்புச் சட்டத்தின்படி இது எனது உரிமை. என்னுடைய மற்றும் எனது மருத்துவருடைய அனுமதி இல்லாமல் எதுவுமே செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கேவும் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sonam Wangchuk's wife, Gitanjali J. Angmo, stated on Saturday (July 18) that no treatment should be initiated without her permission.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.