மாநிலங்களவை எம்.பி.க்களின் 2 ஆண்டு செலவினம் ரூ.262 கோடி: ஆா்டிஐயில் தகவல்!
மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு கடந்த இரு நிதியாண்டுகளில் ஊதியம் உள்ளிட்ட பிற சலுகைகளுக்கு ரூ.262 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு கடந்த இரு நிதியாண்டுகளில் ஊதியம் உள்ளிட்ட பிற சலுகைகளுக்கு ரூ.262 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இதில் சலுகைகள் மற்றும் பயணச் செலவுகளுக்கு மட்டும் ரூ.151 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சந்தா் சேகா் கௌா் என்பவா் தாக்கல் செய்த ஆா்டிஐ மனுவுக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், ‘2024-25 மற்றும் 2025-26 ஆகிய இரு நிதியாண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணச் செலவு, அலுவலக செலவுகள் மற்றும் மருத்துவக் கட்டணங்கள் என ஒட்டுமொத்தமாக மாநிலங்களவை எம்.பி.க்களின் செலவினங்களுக்கு ரூ.262 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. 2024-25-இல் ரூ.98 கோடியாக இருந்த செலவினம் 2025-26-இல் ரூ.163 கோடியாக அதிகரித்தது.
Advertisement
Advertisement
2024-25-இல் ஊதியம் (ரூ.25.71 கோடி), மருத்துவக் கட்டணம் (ரூ.8.2 கோடி), சுற்றுலா செலவினங்கள் (ரூ.24.99 கோடி), சலுகைகள் (ரூ.33.33 கோடி) என ரூ.98 கோடியும் 2025-26-இல் ஊதியம் (ரூ.44.6 கோடி), மருத்துவக் கட்டணம் (ரூ.9.6 கோடி), சுற்றுலா செலவினங்கள் (ரூ.36 கோடி) மற்றும் சலுகைகள் (ரூ.58.78 கோடி) என ரூ.163 கோடியும் ஒதுக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியங்கள், சலுகைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா செலவு, மருத்துவக் கட்டணம், அச்சிடுதல் மற்றும் வெளியீடு, எண்ம சாதனம், எரிபொருள், பராமரிப்பு மற்றும் மேலாண்மை உள்ளிட்ட 21 பிரிவுகளின்கீழ் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.