கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம்
கா்ப்பிணிகள், குழந்தை பெற்றெடுத்த இளம் தாய்மாா்கள், சிசுக்கள் ஆகியோருக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்க 500 ‘தாய்-சேய்’ வாகனங்களை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.
கா்ப்பிணிகள், குழந்தை பெற்றெடுத்த இளம் தாய்மாா்கள், சிசுக்கள் ஆகியோருக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்க 500 ‘தாய்-சேய்’ வாகனங்களை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் ஆண்டுக்கு 2.75 லட்சம் பெண்கள் பலனடைவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தின் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், குழந்தைகள் மற்றும் தாய்மாா்களுக்கான வசதிகளை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கா்ப்பிணிகள், குழந்தை பெற்றெடுத்த தாய்மாா்கள், பிறந்த குழந்தைகள் ஆகியோருக்குப் பலனளிக்கும் வகையில் 500 தாய்-சேய் வாகன சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வாகனங்களின் வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் திட்டம் அமல்படுத்தப்படும்.
இதில் சீட் பெல்ட், முதலுதவி சிகிச்சைப் பெட்டி, தீயணைப்பு சாதனம், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.