FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிஜேபி போராட்டம்: இளைஞர்கள் மீதான காவல்துறையின் அத்துமீறலுக்கு உதயநிதி கண்டனம்!

அமைதி வழியில் போராடும் இளைஞர்களின் மீது காவல்துறை நிகழ்த்திய அத்துமீறலுக்கு உதயநிதி கண்டனம் தெரிவித்தது பற்றி...

Updated On : 20 ஜூலை 2026, 6:39 pm IST
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ். - படம் - பிடிஐ
பகிர்:

அமைதி வழியில் போராடும் இளைஞர்களின் மீது காவல்துறை நிகழ்த்திய அத்துமீறலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடங்கிய போராட்டம் இன்று தீவிரமடைந்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து, போராட்ட களமான ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் இன்று தடியடி நடத்தினர். இதில் இரு தரப்புக்கிடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து, அமைதி வழியில் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையின் அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தில்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.

போராட்டக்காரர்களின் கவலைகளைப் போக்குவதற்கு பதிலாக காவல்துறையினரின் மூலமாக அரசாங்கம் பதிலளித்து வருகிறது. ஜனநாயகத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரல், நாட்டின் தலைநகர் உள்பட நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. நாட்டில் இளைஞர்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது. அவர்களுக்கு செவிசாயுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

summary

Leader of the Opposition Udhayanidhi Stalin has strongly condemned the police excesses against youths protesting peacefully.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments