FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றம் மக்களின் குரல் ஒலிக்கும் இடம்; அறிவிப்புப் பலகை அல்ல: சசி தரூர்!

காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம் சாட்டியது தொடர்பாக..

Updated On : 20 ஜூலை 2026, 2:07 pm IST
சசி தரூர் - X
பகிர்:

நாடாளுமன்றம் வெறும் மசோதாக்களை அறிவிப்பதற்கும் அவற்றை நிறைவேற்றுவதற்குமான அறிவிப்புப் பலகை அல்ல என காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியவுடன், பல்வேறு பிரச்னைகளை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கியுள்ளது.

மத்திய அரசு தனது முடிவைச் செயல்படுத்தும் என்பதால், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குரலை வெளிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற கரப்பான்பூச்சி கட்சி அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீற முயன்றதாகக் கூறப்படும் நிலையில், நாடாளுமன்ற வீதிக்கு அருகே பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியது குறித்த கேள்விக்கு தரூர் பதிலளித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் சூழலில், இத்தகைய நடவடிக்கைகள் எந்த மனநிலையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை, தடியடி நடத்துவதற்கான காரணம் என்ன? தடியடி என்பது அகிம்சை சார்ந்த செயல் அல்ல, அது வன்முறைச் செயல். இதன் பின்னணியில் உள்ள தர்க்கம் எனக்குப் புரியவில்லை என்று கூறினார்.

அயோத்தி நன்கொடை முறைகேடு, நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் போன்ற முக்கிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப விரும்புகின்றனர். ஆனால் அரசு விவாதம் நடத்தத் தயாராக இல்லை

விவாதத்தைக் கண்டு அவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை? இவை நாடு முழுவதும் உள்ள மிக முக்கியமான பிரச்னைகள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இவை குறித்து விவாதிப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

நாடாளுமன்றம் என்பது மக்களின் குரலையும் அவர்களின் கவலைகளையும் வெளிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும்; அதைச் செய்த பிறகு, அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

மத்திய அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் தங்கள் விருப்பப்படியே செயல்படுவார்கள்; எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிப்பதில்லை என்று சசி தரூர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments