ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறலில் இருந்து தப்ப முடியாது - காங்கிரஸ்!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகியது பற்றி காங்கிரஸ் கருத்து..
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகியது, ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறலில் இருந்து தப்ப முடியாது என்பதை ஒப்புக்கொள்வதாகும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சசி தரூர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இந்தப் பதவி விலகலுடன் பொறுப்புக்கூறல் முடிந்துவிடாது என்றும், வெளிப்படையான சீர்திருத்தங்கள் மூலம் ஆழமான குறைபாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
Advertisement
Advertisement
அமைதியான முறையில் போராடியும், குரல் கொடுத்தும், விடாமுயற்சியுடன் செயல்பட்ட மாணவர்களுக்கு இது சீர்திருத்தத்தின் தொடக்கமே தவிர, முடிவு அல்ல. கல்வி அமைச்சரின் ராஜிநாமா என்பது ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முடியாது என்பதற்கான ஒப்புதலாகும்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் குடிமக்கள் தங்கள் குரல் புறக்கணிக்கப்படுவதை ஏற்காமல், உறுதியுடனும் அமைதியுடனும் பல வாரங்களாக எழுப்பிய குரல்களின் விளைவாக இது நிகழ்ந்துள்ளது.
அமைதியான முறையில் போராடுவதற்கான தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியதற்காக, ஏராளமான இளம் இந்தியர்கள் தேவையற்ற காவல் துறை வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளான பின்னரே இந்த நிகழ்வு நடந்துள்ளது.
அரசியல் சார்பு ஏதுவாக இருந்தாலும், இது ஒவ்வொரு குடிமகனையும் கவலைக்குள்ளாக வேண்டிய விஷயம். ஆனால், ஒரு ராஜினாமாவுடன் பொறுப்புக்கூறல் முடிந்துவிடுவதில்லை.
இத்தகைய சூழலுக்கு இட்டுச் சென்ற ஆழமான குறைபாடுகள், வெளிப்படையான சீர்திருத்தங்கள், நிறுவன ரீதியான பொறுப்புணர்வு, எந்தவொரு இளம் இந்தியரின் எதிர்காலமும் மீண்டும் ஆபத்துக்குள்ளாகாது என்பதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சரிசெய்யப்பட வேண்டும் என்று தரூர் கூறினார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
Senior Congress leader Shashi Tharoor on Saturday said Dharmendra Pradhan's resignation as Union Education Minister is an acknowledgment of the fact that accountability in a democracy cannot be indefinitely evaded.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.