FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உக்ரைனில் சரக்குக் கப்பல் மீது ரஷியா தாக்குதல்: திருமணம் நிச்சயமான கேரள மாலுமி பலி!

ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியான நிலையில், ஒருவர் கேரளத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் கிடைத்துள்ளது.

Updated On : 21 ஜூலை 2026, 2:05 pm IST
அகில் ஜோயன் - Facebook
பகிர்:

உக்ரைன் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதில், கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.

அகில் ஜோயலின் பெற்றோர் கேரளத்தில் வசித்து வரும் நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்கு வந்தபோது, சொந்த ஊரில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 2027-ல் அவருக்குத் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட அகில் ஒரு மாதத்திற்கு முன்னர் கப்பல் பணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

Advertisement

Advertisement

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவ் நாட்டின் கொடியேந்திய எம்வி கோல்டன் லியோ என்ற சரக்குக் கப்பலில் அகில் வேலை செய்தார். இந்தக் கப்பல் ஞாயிறு இரவு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 4 இந்தியர்கள் உள்பட பலர் பலியாகினர்.

கப்பல் நிறுவனத்தில் இருந்து அகிலின் மரணம் குறித்து நேற்று (ஜூலை 20) குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரஷிய ஏவுகணையால் கப்பல் தாக்கப்பட்டு, அகில் காணாமல் போனதாக அந்நிறுவனம் முதலில் தகவல் தெரிவித்ததாக அகிலின் தந்தை ஜோயன் தெரிவித்தார்.

"தகவல் கிடைத்தவுடன் மேற்கொண்டு விவரங்களைப் பகிர்ந்து கொள்வதாக அவர்கள் கூறினார்கள். பின்னர், நான் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டபோது, இரு உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று அகிலின் உடல் என்றும் சொன்னார்கள்” என்று ஜோயன் கூறினார்.

அகிலின் உடல் எப்போது கேரளாவுக்கு கொண்டு வரப்படும் என்ற தகவலுக்காக குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். உடலை இந்தியா அனுப்புவது தொடர்பாக கப்பல் நிறுவனம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று அகிலின் தந்தை குறிப்பிட்டார்.

அகிலின் குடும்பத்தினர் காசர்கோடு எம்பி ராஜ்மோகன் உன்னிதனை அணுகி, அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வர உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

தனது மகன் கடலில் இருந்தபோது குடும்பத்துடன் அடிக்கடி பேசியதை நினைவு கூர்ந்த அகிலின் தந்தை, ஞாயிறன்று வழக்கம்போல அவர் மிஸ்ட் கால் கொடுத்ததாகவும், திருப்பி அழைத்த போது அவரது போன் ஆஃப் ஆகியிருந்ததாகவும் தெரிவித்தார்.

அகிலின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்து அவரது இறுதிச் சடங்குகளை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் அகில் ஜோயன் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

summary

Russian attack on ship in Ukraine: Kerala sailor killed; his wedding was already fixed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments