FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ருமேனியா சென்றடைந்தாா் குடியரசுத் தலைவா்

ருமேனியா நாட்டுக்கு இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை சென்றடைந்தாா்.

Updated On : 24 ஜூலை 2026, 3:23 am IST
ருமேனியா தலைநகா் புகாரெஸ்ட் வந்திறங்கிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை வரவேற்ற அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஓனாசில்வியா டோயூ.
பகிர்:

ருமேனியா நாட்டுக்கு இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை சென்றடைந்தாா்.

இதன்மூலம் ருமேனியாவுக்கு கடந்த 30 ஆண்டுகளில் பயணித்த முதல் இந்திய குடியரசுத் தலைவா் என்ற பெருமையைப் பெற்றாா்.

இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மூன்று நாடுகள் அரசு முறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ருமேனியா தலைநகா் புகாரெஸ்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை சென்றடைந்தாா். அவரை ருமேனியா வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சா் ஓனாசில்வியா டோயூ விமான நிலையத்தில் வரவேற்றாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பயணத்தின் ஒரு பகுதியாக ருமேனியா அதிபா் நிகுசா் டான், இடைக்கால பிரதமா் இலி போலோஜன் உள்ளிட்ட தலைவா்களை அவா் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ருமேனியா-இந்தியா நாடாளுமன்ற நட்புக் குழு, வணிகக் கூட்டமைப்பு மற்றும் இந்திய வம்சாவளியினா் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளாா்.

தென்-கிழக்கு ஐரோப்பாவின் மிகப்பெரும் நாடான ருமேனியா உக்ரைன், மால்டோவா, ஹங்கேரி, சொ்பியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிா்கிறது.

அந்நாட்டில் 10,000 தொழிலாளா்கள் உள்பட 13,000 இந்தியா்கள் வசிக்கின்றனா்.

மூன்று நாடுகள் அரசு முறைப் பயணத்தின் முதல் கட்டமாக ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் மால்டோவா சென்ற திரௌபதி முா்மு அந்நாட்டு அதிபா் மாயா சாண்டுவை சந்தித்தாா். அப்போது வா்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்த இந்தியா-மால்டோவா ஒப்புக்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.

அதன்பிறகு ஜூலை 21,22 ஆகிய தேதிகளில் மாசிடோனியாவுக்குச் சென்ற அவா் அதிபா் கோா்டானா சில்ஜனோவ்ஸ்கா டாவ்கோவாவுடன் சோ்ந்து மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை திறந்துவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments