FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜந்தர் மந்தரில் போராடும் பெண்களுக்கு சவாலாக மாறியுள்ள அடிப்படை வசதிகள்!

ஜந்தர் மந்தரில் அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு முகாமிட்டுள்ளோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்வது பற்றி..

Updated On : 25 ஜூலை 2026, 2:36 pm IST
நீட் தேர்வுக்கு எதிராக புதுதில்லி ஜந்தர் மந்தரில் பதாகை ஏந்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்.
பகிர்:

தில்லியின் ஜந்தர் மந்தரில் முகாமிட்டுள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜூன் 20 முதல் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி பிரதான் பதவி விலக வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஜேபி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில் தில்லி காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை, மும்பை, பிகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் முகாமிட்டுள்ள பல பெண்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெய்யில் நீண்ட நேரம் இருப்பது, கூட்ட நெரிசலைக் கையாள்வது ஆகியவற்றை விட, சுத்தமான எளிதில் அணுகக்கூடிய கழிப்பறையைக் கண்டறிவதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

போராட்டக் களத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாலும், அருகிலுள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துவது மிகவும் கடினமாகிவிட்டதாலும், அடிப்படை சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அன்றாடப் போராட்டமாக மாறியுள்ளதாகப் பெண் போராட்டக்காரர்களுக்குத் தன்னார்வ மருத்துவர்களும் கூறுகின்றனர். இதனால் சிலர் போராட்டக் களத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஜந்தர்மந்தர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல பெண்கள் தங்களின் கடினமான விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அவற்றில், பெங்களூருலுவைச் சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்ததில், போராட்டக் களத்தில் தங்கியிருக்கும்போது கழிப்பறையைப் பயன்படுத்துவது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாக மாறியது. இயற்கை உபாதைகளைக் கழிக்கத் தங்கும் விடுதிக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அடிப்படை வசதிகள் இல்லாததால் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபடுவது கடினமானது என்றார்.

மேலும், பல நாள்களாகப் போராட்டக் களத்தில் பணியாற்றி வரும் தன்னார்வல மருத்துவர் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஜந்தர் மந்தரில் ஆரம்பத்திலிருந்தே தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. போராட்டக் களத்தில் மாதவிடாய் ஏற்பட்டபோது கழிப்பறை பயன்படுத்த முடியாமல்.. அதெல்லாம் மோசமான அனுபவம். போராட்டக் களத்தைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகத் தன்னார்வலர்களுக்கு உணவு கிடைப்பதிலும் சிரமம் இருந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.

எங்களுக்காக மக்கள் வழங்கிய உணவைக் கூட நாங்கள் பெற முடியவில்லை. உணவு விநியோகம் செய்பவரால் அந்த இடத்திற்கு வர முடியவில்லை. கடுமையான சோதனைகள் இருப்பதாலும், போராட்டக் களத்திற்குள் மக்களை அனுமதிக்காததாலும் எங்களுக்கு உணவைக் கொண்டு வர முடியவில்லை என்று அவர் கூறினார்.

போராட்டப் பகுதிக்கு வெளியே உள்ள உணவகங்களின் கழிப்பறைகளைப் பயன்படுத்த ஜன்பத் மெட்ரோ நிலையத்திற்கு நடந்து சென்றாக தன்னார்வ மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பலருக்கு நீர்ச்சத்து இழப்பு, உடல் சோர்வு, வெட்டுக்காயங்கள் மற்றும் சிறு காயங்களால் பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவ முகாம்களின் செயல்பாடுகளையும் வசதிக்குறைபாடுகள் பாதித்துள்ளன. உள்ளே இருக்கும் மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments