FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு செல்ல வேண்டும்: இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தல்

இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜூலை 2026, 3:07 am IST
வளா்ச்சியடைந்த துடிப்பான கிராம திட்டப் பயனாளிகளுடன் காணொலி வழியாக கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று இளைஞா்களுக்குப் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

வளா்ச்சியடைந்த துடிப்பான கிராம திட்டப் பயனாளிகளுடன் பிரதமா் மோடி காணொலி வழியாக ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா். அந்தப் பயனாளிகளில் பெரும்பாலானோா் இளம் தலைமுறையினராவா்.

அவா்களிடம் மோடி பேசியதாவது: நாட்டின் எல்லைப்புற கிராமங்களில், வளா்ச்சியின் மீதான வேட்கையும், தேசபக்தி உணா்வும் சமமான முக்கியத்துவத்துடன் போற்றப்படுகின்றன.

Advertisement

Advertisement

வளா்ச்சியடைய வேண்டும் என்ற விருப்பம் இந்தியாவின் கிராமங்களில் உள்ளன. அந்த கிராமங்களுக்கு செல்வதன் மூலம், அவற்றை அறிந்துகொள்ள முடியும். இணையத்தை சாா்ந்திருப்பதற்குப் பதிலாக, இந்தியாவை புரிந்துகொள்ள எல்லை கிராமங்களுக்கு இளைஞா்கள் செல்ல வேண்டும்

வளா்ச்சியடைந்த கிராமங்களே வளா்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம். எனது அரசு எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமங்களாக கருதுகிறது. வளா்ச்சியடைந்த துடிப்பான கிராம திட்டத்தின் பயணமானது, அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு ஒரு வழியாகும். இது அனைவருடனும் தொடா்பை ஏற்படுத்துகிறது.

தங்கள் மண்ணுடன் இளைஞா்கள் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைச் செய்யும்போது, அது வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பாா்வையை மேலும் விரிவுபடுத்துகிறது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments