FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் நிரந்தர தீர்வு காண அறிவியல் அடிப்படையிலான அமைப்பு வேண்டும்: ராகுல்

அஸ்ஸாமில் அறிவியல் பூர்வ தடுப்பு நடவடிக்கைகளுக்கான வலுவான அமைப்பு தேவை என்பதைக் குறித்து ராகுலின் பதிவு...

Updated On : 27 ஜூலை 2026, 12:11 pm IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

அஸ்ஸாமில் அறிவியல் பூர்வமான தடுப்பு நடவடிக்கைகள், மேற்கொள்ள வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில், 

அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுடன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில மற்றும் மத்திய அரசுகள் முழு வீச்சில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் ஏற்பட்டு, அதனால் பெரும் உயிர்ச்மேசதம், இழப்புகள் ஏற்படுவதோடு, பல குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழலும் உருவாகிறது. 

வெள்ளப் பிரச்னையை எதிர்கொள்ள ஒரு வலுவான மற்றும் நிரந்தரமான அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடுமையான வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து, மக்கள் ஆண்டுதோறும் இத்தகைய துயரங்களைச் சந்திக்காத வகையில், அறிவியல் பூர்வமான தடுப்பு நடவடிக்கைகள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், மறுவாழ்வுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும். 

இந்தாண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. நிலைமை ஒட்டுமொத்தமாகச் சீரடைந்து வந்தாலும், ஐந்து மாவட்டங்களில் 5.24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் தகவலின்படி, நான்கு மாவட்டங்களில் மொத்தம் 354 நிவாரண முகாம்கள், உதவி வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இடம்பெயர்ந்த 37,724 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் அவசரச் சேவைத் துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இவ்வாறு அவர் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். 

In the wake of devastating floods in Assam, Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi on Monday called for establishing a robust system that prioritises scientific prevention, early warning mechanisms and rehabilitation, so that people do not have to face such tragedies year after year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments