FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ.4,200 கோடியில் எக்ஸ்பிரஸ்வே.. 12 நாள்களில் வெடிப்பு! நேற்றோ..

ரூ.4,200 கோடியில் எக்ஸ்பிரஸ்வே சாலை திறக்கப்பட்ட 12 நாள்களில் பாலம் பாலமாக வெடித்திருப்பது பற்றி..

எக்ஸ்பிரஸ்வே சாலை - From video grab
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரியால் திறந்து வைக்கப்பட்ட ரூ.4,200 கோடியில் உருவாக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில் மழை பெய்ததால், வெடிப்பு ஏற்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கான்பூர் - லக்னௌ இடையே அமைக்கப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் வே-யில் பழுதான சாலை நேற்று தோண்டி அகற்றப்பட்டு புதிய சாலை போடப்பட்டுள்ளது.

மழை பெய்த நிலையில், வாகனங்கள் சென்று வந்ததால், சாலைகளில் மேடுபள்ளம் ஏற்பட்டு, மேடான பகுதிகளில் பெரிய பெரிய விரிசல்கள் விழுந்திருப்பது, புதிய சாலைதானே பறக்கலாம் என அவ்வழியில் வருவோருக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுக்கலாம்.

Advertisement

Advertisement

இரண்டு வாரங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர்கள், முதல்வர் என பெரிய தலைவர்கள் பங்கேற்று சாலையை திறந்து வைத்தனர். ஆனால், வெறும் இரண்டு வாரங்கள்தான், அந்த சாலையின் அடையாளமே இன்று வேறாகி நிற்கிறது.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மதுசூதன் யாதவ், எக்ஸ்பிரஸ்வேயின் விடியோ ஒன்றை பதிவிட்டு, கோராரி கிராமம் அருகே, 5 முதல் 7 மீட்டர் வரை சாலை சேதமடைந்திருக்கிறது.

மழைக்குப் பிறகு சாலை எப்படி மோசமடைந்திருக்கிறது என்பதையும் அவர் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இது பரவலாக அதிருப்தியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

எக்ஸ்பிரஸ் வே சாலையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments