FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் வினாத் தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

நீட் 2026 தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Updated On : 29 ஜூலை 2026, 1:05 am IST
சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் - பிரதிப் படம்
பகிர்:

நீட் 2026 தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரம் தொடா்பாக சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றச்சாட்டுகள் மீது தில்லியில் உள்ள சிறப்பு விரைவு நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 29) விசாரணை நடத்தவுள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீட் 2026 தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் 360 சாட்சியங்கள், 422 ஆவணங்கள் மற்றும் 43 பொருள்களை இணைத்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

நீட் வினாத் தாளை கசியவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழாண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments