மசோதாக்கள் மாறலாம்; வேறு எதுவும் மாறப் போவதில்லை: கார்கே
பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா குறித்து கார்கே பேசியது பற்றி...
பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா கொண்டு வந்தபோதிலும், மாற்றம் ஏதும் நடக்கப் போவதில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது, "வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்? பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026-ஐ இப்போதுதான் நீங்கள் கொண்டு வருகிறீர்கள். இந்த மசோதாவில் புள்ளிவிவரங்கள்தான் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், வேறு எதுவும் நடக்கப் போவதில்லை.
அதிக அபராதம், கடும் தண்டனை, சிறப்புப் பணிக் குழு, விரைவு நீதிமன்றங்கள் போன்ற விதிகளை நீங்கள் சேர்த்துள்ளீர்கள். ஆனால், இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
Advertisement
Advertisement
இந்த வலுவான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என 2024-லிலேயே அதற்கான கோரிக்கையை நாங்கள் வைத்தோம். ஆனால், எங்கள் கோரிக்கையை நீங்கள் ஏற்கவில்லை. நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். ஆனால், நீங்கள் எதுவுமே செய்யவில்லை.
இப்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யும் இந்த வேலையை ஏன் 2024-லிலேயே செய்யவில்லை?
2024-ல் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவை நீங்கள் முன்மொழியவில்லை. ஏனெனில், அன்றைக்கு மக்களவைத் தேர்தலில் வந்ததால், அதனால் உங்களுக்கு அரசியல்ரீதியாக லாபமில்லை என அதனை நீங்கள் கொண்டு வரவில்லை.
நமது உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறிய விஷயங்கள் குறித்து பேசுகிறார். எல்லா இடங்களுக்கும் செல்கிறார். ஆனால், இங்கு வரவில்லை. பிரதமர்கூட பேசவில்லை.
சட்டம் - ஒழுங்கை உள்துறை அமைச்சர்தான் மேற்பார்வையிடுகிறார். தில்லியில் நிறைய நடந்தது. ஆனால், நீங்கள் வாயே திறக்கவில்லை. நீங்கள் வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். சில நேரங்களில் நாட்டின் முன்னேற்றத்துக்காக அவமானத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மாணவர்களின் போராட்டம் குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் மௌனமாய் இருந்தால், அவர்களுக்கு மாணவர்கள் மீண்டும் ஒரு பாடம் கற்பிப்பார்கள். மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் பொறுப்பு. ஜூலை 20-ல் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மையை நாடாளுமன்றத்தில் அரசு முன்வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களிடம் அரசு மன்னிப்பு கோரியது, பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அல்ல. அவர்களின் ஆட்சியை இழக்க நேரிடும் என்பதால்தான் மன்னிப்பு கோரினர்" என்று தெரிவித்தார்.
Even though a bill to prevent malpractice in public examinations has been introduced, nothing is going to change, says Mallikarjun Kharge
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.