மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி!
விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் இன்று (ஜூன் 2) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 2019 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முந்தைய காலகட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2026–27 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட்டைச் சமர்ப்பித்தபோது முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இத்திட்டத்தை முன்மொழிந்தார்.
Advertisement
Advertisement
அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
எனினும், ஜூன் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள 17 மாநில கவுன்சில் இடங்களுக்கான தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருவதால், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் 56 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
Maha cabinet clears Rs 36,585 crore farm loan waiver
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.