கர்நாடக துணை முதல்வராகிறார் பரமேஸ்வரா! சித்தராமையா அறிவிப்பு!
கர்நாடக துணை முதல்வராகிறார் பரமேஸ்வரா பதவியேற்கவுள்ளது பற்றி...
கர்நாடகத்தின் துணை முதல்வராக ஜி. பரமேஸ்வரா இன்று பதவியேற்பார் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெற்றது. தொடர்ந்து, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவகுமாரும் முதல்வராக பதவி வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகாலம் முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதைத் தொடா்ந்து, பெங்களூரில் மே 30-ஆம் தேதி காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலைவராக டி.கே.சிவகுமாா் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்பிறகு ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்த டி.கே.சிவகுமாா், ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். தொடர்ந்து ஆளுநரும் அழைப்பு விடுத்தார்.
Advertisement
Advertisement
பெங்களூரு, மக்கள் மாளிகையில் இன்று மாலை 4.05 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், கா்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமாா் பதவியேற்க உள்ளாா். அவருடன் துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், துணை முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்கவுள்ளதை சித்தராமையா உறுதி செய்துள்ளார்.
முதல்வராக பதவியேற்கவுள்ள டி.கே. சிவக்குமாரும், துணை முதல்வராக பதவியேற்கவுள்ள ஜி. பரமேஸ்வராவும் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்று சித்தராமையா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் பரமேஸ்வரா உள்துறை அமைச்சராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Parameshwara to become Karnataka Deputy Chief Minister! Siddaramaiah announces.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.