ரூ. 30,000 கோடி டெண்டர் முறைகேடு! ஆதாரங்களை வெளியிட பாஜகவுக்கு காங்கிரஸ் சவால்
கழிவு மேலாண்மை டெண்டர் முறைகேடு குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் என பாஜகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தல்
பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டர் முறைகேடு குறித்து ஆதாரங்களை பாஜக வெளியிட வேண்டும் என காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது, "முறைகேடு நடந்ததாக உங்களிடம் ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், அதனை வெளியிடுங்கள்.
அதனை விடுத்து ஆளுநர் இல்லத்துக்குச் செல்வது தீர்வல்ல. உங்களிடம் உள்ள ஆதாரங்களை மக்களிடம் காட்டுங்கள். ஆளுநர் அலுவலகத்தில் அறிக்கை வழங்குவது என்ன முட்டாள்தனமாக இல்லை?
Advertisement
Advertisement
இதில் எந்த மோசடியோ முறைகேடோ இல்லை என முதல்வர் தெளிவுபடுத்தி விட்டார். எந்தவொரு விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேட்டில் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான அரசு ஈடுபட்டதாக மாநில பாஜக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
இந்த முறைகேட்டின் பயனாக காங்கிரஸ் அரசுக்கு தனியார் ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்து ரூ. 10,000 கோடி கிடைத்திருப்பதாகவும் பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக ஆளுநரிடம் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா புகார் அளித்துள்ளார். அதில், கழிவுகள் மேலாண்மை டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி விசாரணை கோரியுள்ளார்.
இதற்கான டெண்டர் குறிப்பிட்டதொரு தனியார் ஒப்பந்ததாரரிடம் மட்டுமே அடுத்த 35 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டதாகவும் அதிலும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் அதிக விலைக்கு அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Rs 30,000 crore tender scam: Karnataka Congress asks BJP to release documents
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.