தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ரூ. 45 லட்சம் மோசடி! வங்கி உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது!
தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ரூ. 45 லட்சம் மோசடி செய்த கும்பலைக் காவல்துறை கைது செய்தது குறித்து...
தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ. 45 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் கும்பலின் செயலைக் காவல்துறை முறியடித்து, 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
சட்டப்பூர்வமான வர்த்தக தளம் போல வடிவமைத்த ஒரு செயலியின் மூலம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி தன்னிடம் இருந்து ரூ.45.33 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, “மோசடிக்காரர்கள், பிரபலமான முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல நடித்து, அதிக மற்றும் உறுதியான வருமானம் தருவதாக அந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கு வாக்குறுதியளித்தனர்.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்டவரை ஐபிஓ-க்களில் முதலீடு செய்ய ஆசை காட்டினர். அவரது நம்பிக்கையைப் பெறுவதற்காக, குற்றவாளிகள் முறையாக வடிவமைக்கப்பட்ட ஒரு போலிச் செயலியையும், இணையதளத்தையும் பயன்படுத்தினர்” என்று காவல்துறை தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் உத்தரகண்டின் உதம் சிங் நகரைச் சேர்ந்த கபில் பெயின் (25), மனோஜ் சர்மா (26) மற்றும் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரான கமல் பாண்டே (24) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை அடையாளம் காணவும், பணப் பரிவர்த்தனைப் பாதையைக் கண்டறியவும் மற்றும் இதுபோன்ற மோசடித் தளங்கள் மூலம் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியவும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, 3 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேரைக் கைது செய்ததன் மூலம் கைது எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In Delhi, the police have foiled the operations of a gang alleged to have defrauded a retired government official of over ₹45 lakhs using a fake trading app, and have arrested three individuals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.