மாநிலங்களவை பதவியும் வேண்டாம்.. ராஜிநாமா பற்றி சித்தராமையா விளக்கம்!
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? என்பது குறித்து சித்தராமையா விளக்கமளித்துள்ளதைப் பற்றி...
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகியது ஏன்? என்பது குறித்து சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை முன்வைத்ததை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.
Advertisement
Advertisement
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக டிகே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று, சித்தராமையா இன்று (மே.28) முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடத்தில் மாநிலங்களவை எம்பி பதவி வழங்க முன்வந்ததாகவும், அதனை அவர் நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள்ளார். மேலும், பதவி விலகியது ஏன்? என்பது பற்றி சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
சித்தராமையா பேசும்போது, “நான் தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. மாநிலங்களவை பதவி குறித்தும் என்னிடம் கேட்கப்பட்டது. நான் அதை மறுத்துவிட்டேன். நான் கர்நாடக அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன். நான் உங்கள் அனைவரிடமும் பலமுறை கூறியுள்ளேன், கட்சித் தலைமை என்னை ராஜிநாமா செய்யச் சொன்னால், நான் ராஜிநாமா செய்வேன் என்று சொல்லியிருந்தபடியே ராஜிநாமா செய்துள்ளேன்” என்றார்.
Soon after submitting his resignation as chief minister of Karnataka, Siddaramaiah on Thursday made it clear that his political journey was far from over, declaring that he would remain active in state politics and had no interest in shifting to a national role.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.