ஆசியாவின் திறன் வாய்ந்த தலைவர்கள்: ஜின்பிங்கிற்கு முதலிடம்! மோடிக்கு 2வது இடம்!
ஆசியாவின் மிகவும் திறன் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 2 வது இடம் பிடித்துள்ளது குறித்து...

ஆசியாவின் மிகவும் திறன் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 2 வது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளார்.
கொள்கை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் லோவி இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆசிய ஆற்றல் குறியீடு 2026 ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
2026 குறியீட்டு பட்டியலில் இந்தியா 0.5 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 40.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இப்பட்டியலில் சீனாவும் அமெரிக்காவும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
2026 குறியீட்டில் அமெரிக்கா நூற்றுக்கு 78.9 புள்ளிகளையும் சீனா 73.6 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளில் கலாசார ரீதியான இந்தியா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த ஆண்டு 2.3 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. பாதுகாப்புப் பிரிவில் 2.1 புள்ளிகளையும், எதிர்கால ஆற்றல் வளங்களில் 1.2 புள்ளிகளையும், ராணுவத் திறனில் 0.5 புள்ளிகளையும் கூடுதலாகப் பெற்றுள்ளது.
இருப்பினும் பொருளாதாரத் திறனில் 0.7 புள்ளிகள் சரிந்துள்ளது. பொருளாதார திறனில் 26.4 புள்ளிகளுடன் முன்பை விட சரிந்துள்ளது. கலாசார தாக்கத்தில் 43.8 புள்ளிகளும், கூட்டு ஒத்துழைப்பில் 70.3 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
லோவி இன்ஸ்டிட்யூட் சார்பில் ஆசியாவின் 27 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.