முகப்பு

2024 தேர்தலில் உ.பி. மக்கள் பாஜகவுக்குப் பாடம் புகட்டினர்! - கார்கே பேச்சு!

2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள் பாஜகவுக்குப் பாடம் புகட்டியதாக மல்லிகார்ஜுன கார்கே பேச்சு...

2024 தேர்தலில் உ.பி. மக்கள் பாஜகவுக்குப் பாடம் புகட்டினர்! - கார்கே பேச்சு!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... - கோப்புப் படம்
பகிர்:

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மக்கள் பாஜகவுக்குப் பாடம் புகட்டியுள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

தேசிய அரசியலைப்பு நாளை முன்னிட்டு, வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று (நவ. 26) நாடு தழுவிய போராட்டப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், லக்னௌவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விலைவாசி உயர்வு, எரிவாயு விலையுயர்வு ஆகிவற்றை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

Advertisement

இத்துடன், உத்தரப் பிரதேச மக்கள் பாஜகவுக்குப் பாடம் புகட்டியதுடன் பிரதமர் நரேந்திர மோடியின் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் எனும் முழக்கத்தையும் அடக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“உத்தரப் பிரதேச மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என பிரதமர் மோடி சென்ற இடங்களில் எல்லாம் கூறிவந்தார். ஆனால், பாஜகவால் 400 இடங்களைக் கடக்க முடிந்ததா? மக்கள் பாஜகவை வெளியேற்றியுள்ளனர். உத்தரப் பிரதேச மக்கள் உங்களை மண்டியிடச் செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தால்தான் மோடி இன்று அமைதியாக அமர்ந்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இத்துடன், லக்னொவைச் சேர்ந்த மற்றொரு தலைவரும் பிரதமர் நாற்காலியின் மீது கண் வைத்திருப்பதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோசி ஆதித்யநாத்தை கார்கே மறைமுகமாகச் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Congress leader Mallikarjun Kharge has stated that the people of Uttar Pradesh have taught a lesson to the BJP in the 2024 Lok Sabha elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.