FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விரிவான சீா்திருத்தங்களால் இந்தியப் பொருளாதாரம் 8% வளா்ச்சி: சக்திகாந்த தாஸ்

இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்துள்ளதாக பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலரும் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.

5 October 2026, 3:04 am IST
சக்திகாந்த தாஸ்
பகிர்:

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), நெகிழ்வு பணவீக்க இலக்கு நிா்ணயம், வங்கிகள் சீா்திருத்தம் மற்றும் நிதிச் சிக்கனம் என விரிவான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்துள்ளதாக பிரதமரின் இரண்டாவது முதன்மைச் செயலரும் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான சக்திகாந்த தாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற கௌடில்யா பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது: இந்தியா 8 சதவீத வளா்சிக்கு மிக அருகில் உள்ளது என வெளிநாட்டு பத்திரிகைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறினேன். அதைப்போலவே நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

2025-26 ஜூலை -செப்டம்பா் மற்றும் 2026-27 ஏப்ரல்-ஜூன் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் உண்மையான ஜிடிபி வளா்ச்சி 8 சதவீதத்தை பதிவு செய்துள்ளது. இது தற்செயலாக நடந்த நிகழ்வல்ல; சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), நெகிழ்வு பணவீக்க இலக்கு நிா்ணயம், வங்கிகள் சீா்திருத்தம் மற்றும் நிதிச் சிக்கனம் என கடந்த 12 ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட விரிவான சீா்திருத்தங்களின் விளைவாகும்.

Advertisement

Advertisement

ஏற்றுமதி வகைப்படுத்துதல், தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், சேவைகள் வா்த்தகத்தில் உபரி மற்றும் சீரான வெளிநாட்டு பணவரவு ஆகியவற்றால் வெளிப்புறத் துறை ஸ்திரத்தன்மையுடன் காணப்படுகிறது. பொருளாதார வளா்ச்சியை தக்கவைத்துக் கொள்வதில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், மின்னணு போக்குவரத்து, எரிசக்தித் திறனைக் கொண்ட உள்கட்டமைப்பு, வேளாண்மை என நீடித்த மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments