FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரேமானந்த் ஆசிரமத்தை பிரபலபடுத்த ரூ.5 கோடி பெற்ற விராட் கோலி? செய்தித் தொடர்பாளர் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீதான குற்றச்சாட்டுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கம் குறித்து...

பிரேமானந்த் ஆசிரமத்தில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா - படங்கள்: இன்ஸ்டா / ஐடபிள்யூஎம்பஸ்.காம்
பகிர்:

ஆன்மிக குருவான பிரேமானாந்த் ஆசிரமத்தைப் பிரபலபடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரூ.5 கோடி பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு மே 12ல் அறிவித்தார். அதற்கு அடுத்த சில நாள்களில் ஆன்மிக குருவான பிரேமானந்த் சஹாரன் ஜி மகாராஜிடம் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இன்று ஆசி பெற்றனர்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி பிரேமானந்த் சஹாரன் ஜி மகாராஜிடம் ஆசி பெறும் விடியோவினை அவரது சீடர்கள் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த சமயத்தில் விடியோ இணையத்தில் வைரலானது.

Advertisement

Advertisement

விராட் கோலி அவரது குடும்பத்துடன் பலமுறை ஆன்மிக குருவான பிரேமானந்த் சஹாரன் ஜியை சந்தித்ததாகவும் கூறப்பட்டது.

ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா என்ற ஆன்மிக குரு கடந்த 2023ல் விராட் கோலி ரூ.5 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு பிரேமானந்ததின் அந்த ஆசிரமத்தைப் பிரபலபடுத்தியதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்ஸ்டாவில் விளம்பரத்துக்கும் கோலி அதிகமாக சம்பாதித்தது வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விராட் கோலியின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா கிரிக்கெட்டர் விராட் கோலி குறித்து கூறியது முற்றிலும் பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது, உண்மைக்கு மாறானது.

மஹாராஜ் ஜி மீதான ஆழமான நம்பிக்கை, ஆழ்ந்த மரியாதையினால் மட்டுமே விராட் கோலி சந்தித்தார். பொய்யான குற்றச்சாட்டை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். இந்த மாதிரியான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு முன்பாக பரிசோதிக்கவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

summary

Kohli's spokesperson denies cricketer took money to visit Premanand's ashram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments