FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு உதவ முயன்ற 2 பேர் பலி, மூவர் காயம்

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு உதவ முயன்றவர்கள் பலியானது பற்றி...

9 அக்டோபர் 2026, 4:15 pm IST
விபத்து
பகிர்:

தில்லி-மும்பை விரைவுச்சாலையில், விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு உதவ முயன்ற 2 பேர் விபத்தில் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில் தில்லி பகுதியிலிருந்து வந்த கன்டெய்னர் லாரி, பழுதடைந்த நிலையில் இரண்டு நாட்களாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியது.

விபத்தைத் தொடர்ந்து கன்டெய்னர் லாரி ஓட்டுநர் வாகனத்தின் ஓட்டுநர் அறையில் சிக்கிக்கொண்டார்.

Advertisement

Advertisement

சிக்கியிருந்த ஓட்டுநரைப் பார்த்ததும், அவ்வழியே சென்றவர்கள் மற்றும் பின்னால் வந்த கார் மற்றும் லாரி ஆகியவற்றின் ஓட்டுநர்கள் உதவி செய்வதற்காகத் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.

எனினும், அப்போது பின்னால் வந்த மூன்றாவது கனரக வாகனம் அவர்கள் மீது மோதியதாக ஆய்வாளர் மனோஜ் சிகர்வால் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 2 பேர் விபத்தில் பலியான நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.

பலியானவர்கள் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாம்டீன் (50), ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் குர்ஜார் என அடையாளம் காணப்பட்டனர்.

விபத்தின்போது உள்ளே சிக்கியிருந்த ஓட்டுநரும் காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments