தில்லி ரயில்கள் ரத்து! அரசு அஞ்சினால் முழு நாட்டையும் முடக்கவும்! - தீப்கே காட்டம்!
தில்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கு சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே விமர்சனம்...
இளைஞர்களைக் கண்டு மத்திய அரசு அஞ்சினால் ஒட்டுமொத்த இந்தியாவையும் முடக்குங்கள் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வரும் சனிக்கிழமை (அக்.10) தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு புறப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து புது தில்லி மற்றும் ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து மெயில்/விரைவு ரயில்கள் புறப்படும் இடத்திலேயே ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
தில்லியில், போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனக் கூறி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இளைஞர்களின் போராட்டத்தை முடக்கும் முயற்சி எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞர்களைக் கண்டு அஞ்சினால் முழு இந்தியாவையும் முடக்குங்கள் என சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,
“அரசு இளைஞர்களைக் கண்டு அஞ்சினால் ஒட்டுமொத்த நாட்டையும் முடக்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்துடன், சிஜேபியின் போராட்டத்துக்கு தில்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், போராட்டம் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அரசிடம் அனுமதி பெற வேண்டுமா? என தீப்கே கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Abhijeet Dipke, has stated that if the Government is afraid of the youth, it should shut down the entire country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.