FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாலியல் புகாரில் காங்கிரஸ் எம்.பி. பணிநீக்கம்: காங்கிரஸ் தலைமை மௌனம் காப்பது ஏன்? - பாஜக கேள்வி

பாலியல் புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிமோல் அகோய்ஜாம் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்? பாஜக கேள்வி குறித்து...

11 அக்டோபர் 2026, 10:00 pm IST
பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ் - கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: பாலியல் ரீதியான தவறான நடத்தை தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிமோல் அகோய்ஜாம் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ், இந்த பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை மௌனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் மீது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் 11 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், போக்ஸோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உள்நிலைக் குழு நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் ஜேஎன்யு நிர்வாகம் காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் அனைத்துப் பணிகளிலிருந்தும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை மௌனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய பன்சூரி ஸ்வராஜ், காங்கிரஸ் கட்சி எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் வலியுறுத்தினார்.

BJP MP Bansuri Swaraj raised questions over maintaining silence by the top leadership of congress on this issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments