FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் - துணை ராணுவத்தினர் கடும் வாக்குவாதம்!

காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்பாக...

பகிர்:

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், துணை ராணுவம் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று(அக். 6) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.

விபிபி நகர் பிரதான சாலையில், தட்டாஞ்சாவடி தொழிலாளர் துறை அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அந்த வழியாக வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களை இப்படி செல்லக்கூடாது, வேறு வழியாக செல்லுங்கள் என்று காவல் துறையினர் கூறுவதாக காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் குற்றம் சாட்டினார்.

மேலும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் செயல்படுவதாக, காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, துணை ராணுவம் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், தட்டாஞ்சாவடி தொழிலாளர் துறை வாக்குச்சாவடி அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

summary

A tense situation arose during the Thattanchavadi by-election polling as Congress candidate Vinayagam got into an argument with paramilitary and police personnel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments