FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சௌதி அரேபிய விமான நிலையம் மீதான தாக்குல்: இந்தியா கண்டனம்

சௌதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

11 அக்டோபர் 2026, 11:36 am IST
சௌதி அரேபியா.
பகிர்:

சௌதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது நேற்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் பலியானதுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பலியானதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு 'ஹவுதி' கிளர்ச்சியாளர்களே காரணம் என்று சௌதி அரேபிய குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குலுக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை, குறிப்பாக அக்டோபர் 10ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தத் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளையும், காயங்களையும், சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன." என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், "பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறோம்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

India on Sunday strongly condemned a major attack on Saudi Arabia's international airport in Riyadh that killed 12 people and injured over 300.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments