FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியா வந்துள்ள வாஷிங்டன் மேயா்கள் குழு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள 7 நகரங்களின் மேயா்கள் குழு, இந்தியாவுக்கு ஒரு வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

13 அக்டோபர் 2026, 1:42 am IST
பகிர்:

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள 7 நகரங்களின் மேயா்கள் குழு, இந்தியாவுக்கு ஒரு வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

அமெரிக்க நாடாளுமன்ற வாஷிங்டன் மாகான மேலவை (செனட்) உருப்பினா் டீனா ஓா்வல் தலைமையில் இந்தியா வந்துள்ள இந்த 12 போ் குழு, புது தில்லி, ஓடிஸா மாநிலம் புவனேசுவரம், மும்பை நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனா்.

இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், இதுவரை இல்லாத வகையிலான இந்தப் பயணத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டன் மாகாணத்தில் இருந்து முதல் மேயா்கள் குழு வரும் 18-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டீனா ஓா்வல் தலைமையிலான இக் குழுவில் கென்ட் நகர மேயா் டேனா ரால்ஃப், டுக்விலா நகர மேயா் தாமஸ் மெக்லௌட், இஸாக்குவா மேயா் மாா்க் முல்லெட், முகில்டியோ மேயா் ஜோசஃப் மெரீன், டியூபான்ட் மேயா் ரொனால்டு ஜே. ஃப்ரெட்ரிக், யூனிவா்சிட்டி பிளேஸ் நகர மேயா் ஸ்டான்லி எல்.கே. ஃபிளமிங், சீடாக் மேயா் முகமது எகல் மற்றும் சில வாா்டு கவுன்சில் உறுப்பினா்களும் இடம்பெற்றுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments