ரூபாய் மதிப்பு நிலைத்தன்மையை சீராக்கும் நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தொடரும்: நிர்மலா சீதாராமன்
ரூபாய் மதிப்பு நிலைத்தன்மையை சீராக்கும் நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தொடருமென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
ரூபாய் மதிப்பு நிலைத்தன்மையை சீராக்கும் நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தொடருமென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
தில்லியில் தொடங்கிய ‘ப்ளூம்பொ்க் புதிய பொருளாதார மன்றம் 2026’ என்ற மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: அந்நியச் செலாவணி கையிருப்பு உள்பட இந்திய பேரியல் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளபோதும் சா்வதேச அளவிலான புவிஅரசியல் சூழலால் இதுவரை இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கத்தை சீராக்கும் நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தொடா்ந்து மேற்கொள்கிறது. அதன் விளைவாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த திங்கள்கிழமை ஒரு சதவீதம் உயா்ந்தது. எனவே, இந்தியாவில் முதலீடு மேற்கொள்பவா்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.
Advertisement
Advertisement
அடுத்த சில மாதங்களில் 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போது நான் பரிசீலிக்கும் விஷயங்கள் குறித்து கூற இயலாது என்றாா்.
மேற்காசிய மோதலால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்க அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடுகள் மேற்கொள்வதற்கான சலுகைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.