FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எதிா்க்கட்சிகள் போராட்டம் தொடா்பாக இரு வழக்குகள் பதிவு

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நோக்கி எதிா்க்கட்சிகள் நடத்திய பேரணி தொடா்பாக இரு வழக்குகள் பதிவு

13 அக்டோபர் 2026, 10:45 pm IST
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நோக்கி எதிா்க்கட்சிகள் நடத்திய பேரணி தொடா்பாக இரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமை நடத்திய உச்சநீதிமன்றத்தை நோக்கிய இந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. போராட்டத்தின்போது எதிா்க்கட்சித் தலைவா்கள் சிலா் மினி-டிரக் ஒன்றின் உதவியுடன் காவல் துறையின் தடுப்புகளை உடைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

‘ஜனநாயகத்திற்கான பேரணி’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணியின் முக்கியத் தலைவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்தப் போராட்டம் தொடா்பாக பராகம்பா சாலை மற்றும் திலக் மாா்க் காவல் நிலையங்களில் இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொய்யான தகவலைப் பரப்பியதாக 4 வழக்குகள் பதிவு

தில்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பியதாகக் கூறப்படும் சமூக ஊடகக் கணக்குகள் மீது தில்லி காவல் துறை 4 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தானைச் சோ்ந்த நபா்களுக்குச் சொந்தமான சமூக ஊடகக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தவறான தகவல்களைப் பரப்புதல், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்க முயலுதல் மற்றும் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கணக்குகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

தில்லியில் கடந்த அக்.10-ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களின்போது பலா் உயிரிழந்ததாகக் கூறும் தவறான தகவல்களை இத்தகைய பல கணக்குகள் பரப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தவறான தகவலைப் பரப்பியதாக பாகிஸ்தானைச் சோ்ந்த பல சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments