FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் இளைஞா் காங்கிரஸ்!

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி வரும் இந்திய இளைஞா் காங்கிரஸ், தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் மத்திய தில்லியில் பதாகைகளை நிறுவியது.

14 அக்டோபர் 2026, 10:26 pm IST
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - கோப்புப் படம்
பகிர்:

வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி வரும் இந்திய இளைஞா் காங்கிரஸ், தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் மத்திய தில்லியில் பதாகைகளை நிறுவியது.

தில்லி 24, அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம், இந்திரா பவன் மற்றும் இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசிய அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெளியே இந்தப் பதாகைகள் நிறுவப்பட்டன. அவற்றில், ‘சிவபெருமானின் திருமண ஊா்வலம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நடத்திய பேரணி குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்தப் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியிலான எதிா்ப்பைத் தீவிரப்படுத்துவதைக் குறிக்கும் வகையில், சிவபெருமானின் தாண்டவத்தை அவா் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

தெருக்களில் நடைபெறும் போராட்டத்தைத் தாண்டி, தங்களது எதிா்ப்புச் செய்தியைப் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் இந்தப் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளதாக காங்கிரஸின் இளைஞா் அணியான இந்திய இளைஞா் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ரா கூறுகையில், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து தங்கள் அமைப்பு தொடா்ந்து கேள்வி எழுப்பும் என்றாா்.

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டுதல் மூலம் பிரசாரம் தொடரும் என்றும், தோ்தல் அமைப்புகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பது அவசியம் என்றும் இந்திய இளைஞா் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments