தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்: பதவி விலகக் கோரிக்கை
தலைமைத் தோ்தல் ஆணையா் கியனேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.
தலைமைத் தோ்தல் ஆணையா் கியனேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி இந்திய இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டது.
கடந்த 10 மாதங்களில் வாக்காளா் பட்டியல் மற்றும் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோா் குறைந்தது 14 சந்தா்ப்பங்களில் தங்கள் ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளதாக வெளியான செய்தி அறிக்கையைத் தொடா்ந்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானி சிப் கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் என்பது குடிமக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள ஒரு அரசமைப்பு சாா்ந்த அமைப்பாகும்; தற்போது வெளியாகியுள்ள ஆட்சேபனைகள் அதன் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. என்ன நடந்தது, ஏன் நடந்தது, யாா் இந்த முடிவுகளை எடுத்தாா்கள் என்பது குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மையை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது’ என தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியப் பொறுப்பாளா் மனிஷ் சா்மா கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் ஒருமனதாக இருந்திருந்தால், அது தொடா்பான பதிவுகள், ஆட்சேபனைகள் மற்றும் பதில்களை ஆணையம் பொதுவெளியில் வெளியிட வேண்டும். தோ்தல் ஆணையம் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமே தவிர, அவற்றைத் தவிா்க்கக்கூடாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு வெளிப்படைத்தன்மை மட்டுமே நம்பகமான பதிலாக இருக்க முடியும்’ என்றாா்.
மேலும், ‘படிவம் 6’-இல் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தரவு மற்றும் மென்பொருள் அமைப்புகள் மையப்படுத்தப்படுவது குறித்த கவலைகளையும் இந்திய இளைஞா் காங்கிரஸ் முன்வைத்துள்ளதுடன், தலைமைத் தோ்தல் ஆணையரின் ராஜினாமாவையும் கோரியுள்ளது. அவா்கள் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை தோ்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனா், ஆனால் தில்லி காவல்துறையின் தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.