தில்லி போராட்டத்தில் பரத்வாஜ் மீது திட்டமிட்டுத் தாக்குதல்: சௌரப் பரத்வாஜ் புகார்!
ஜந்தர் மந்தரில் பரத்வாஜ் மீது நடந்த தாக்குதல் பற்றி...
தில்லியில் ஜந்தர் மந்தரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, தில்லி காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் தம் மீது உயிருக்கு அச்சுறுத்தலான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தில்லி மாநிலத் தலைவர் சௌரப் பரத்வாஜ் காவல் ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
மிகவும் தீவிரமான ஆபத்தான உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் குறித்து இந்தப் புகார் அளிக்கிறேன். அதுகுறித்து குற்றச் சதி என்ற பிரிவின் கீழ் முதல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரத்வாஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களின் தன்மை, அவை அரங்கேற்றப்பட்ட விதம், மீண்டும் மீண்டும் நிகழும் விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இவை கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழக்கமான நடவடிக்கைகள் அல்ல என்பது தெளிவாகிறது என்று பரத்வாஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், அதிகாரப்பூர்வ கடமையின் பெயரால் எனக்குக் கடுமையான உடல் காயத்தையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட குற்றச் சதியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாவிட்டால், நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜந்தர் மந்தர் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற சௌரப் பரத்வாஜ் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தி, கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.