துர்க்காஷ்டமியில் ஒடிசா ஆளுநராகப் பொறுப்பேற்கிறார் பிரஜ் மோகன் ராம்!
ஒடிசாவின் புதிய ஆளுநராக அக். 18ல் பொறுப்பேற்பது பற்றி...
ஒடிசாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பிரஜ் மோகன் ராம் அக். 18.ம் தேதி பொறுப்பேற்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
ஜனவரி 3, 2025 அன்று பொறுப்பேற்ற ஹரிபாபு கம்பம்பதிக்குப் பதிலாக, பிரஜ் மோகன் ராம் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
நவராத்திரி துர்க்காஷ்டமி எனும் மங்களகரமான நாளான அக்டோபர் 18 அன்று ஒடிசா ஆளுநராகப் பொறுப்பேற்பேன் என்று ராஞ்சி, மொராபாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
மூன்று முறை பாஜக எம்பியாக இருந்த பிரஜ் மோகன் ராம், அக்டோபர் 17 அன்று ஒடிசாவுக்குப் புறப்பட்டுச் சென்று, மறுநாள் பதவியேற்பார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
நான் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன். மாநிலத்தின் வளர்ச்சியே எனது முதன்மையான நோக்கமாக இருக்கும்.
கல்வி, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உள்பட்ட பிற முக்கிய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஜார்க்கண்டின் பாலமு மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜ் மோகன் ராமை, ஒடிசாவின் புதிய ஆளுநராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திங்கள்கிழமை நியமித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.