ராம்லீலா விழாவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிக்க முடிவு!
தில்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா நிகழ்வில் இந்தாண்டு 30 அடி உயரமுள்ள ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மை எரிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தில்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா நிகழ்வில் இந்தாண்டு 30 அடி உயரமுள்ள ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மை எரிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தில்லியின் பிதம்பூரா பகுதியில் ’ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி’ ராம்லீலா நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது. இந்தக் கமிட்டிக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோயல் தலைவராக உள்ளார்.
இந்தாண்டு ராம்லீலா விழாவில் ‘தூய்மை இந்தியா’ ‘தூய்மை தில்லி’ போன்ற பிரசாரங்களை மேற்கொள்ளும் விதமாக ‘அசுத்தம் மற்றும் அழுக்கை’ குறிக்கும் கரப்பான்பூச்சியின் உருவ பொம்மையை எரிக்கவுள்ளதாக அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாகப் பேசிய கமிட்டியின் தலைவர் அசோக் கோயல், இது அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்று தெரிவித்தார். மேலும், கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிப்பது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி மற்றும் தூய்மையை வலியுறுத்துவதற்காகச் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தாண்டு ராம்லீலா நிகழ்வில், ராவணனின் படையில் உள்ள அசுரர்களான கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோருடன் இந்த கரப்பான் பூச்சியும் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் ’கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி) நடத்தி வரும் போராட்டங்களைத் தொடர்ந்து இந்த உருவ பொம்மை எரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகப் போராடிய இவர்கள், தற்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களின் போது பல்வேறு சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Decision made to burn a 30-foot-tall cockroach effigy at the Ramlila festival
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.