FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

கேரளத்தில் வரும் நாள்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலத்தில் வரும் நாள்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

15 அக்டோபர் 2026, 12:07 am IST
மழை - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலத்தில் வரும் நாள்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்குப் பருவமழை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வியாழக்கிழமையோடு (அக்.15) முழுமையாக விலகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே நேரம், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது.

மேலும், மத்திய கேரளம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 4.5 கி.மீ. உயரத்திலும், கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டயுள்ள பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ. உயரத்திலும் சூறாவளி சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, கேரள மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் அக்டோபா் 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

Advertisement

Advertisement

அதன் காரணமாக, பத்தனம்திட்டா, கோட்டயம், எா்ணாகுளம், இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக்.15) 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதே நாளில் மேலும் 8 மாவட்டங்களுக்கு 6 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments