அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடி
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறித்து...
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 3) தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''நாங்கள் பல்கலைக் கழகங்களை வலுவானதாக்குவோம். திறமை நகர்வுக்கு ஏற்ற ஆய்வு இணைப்புகள், புத்தாக்க நிறுவனங்களுக்கான தொடர்பு ஆகியவற்றையும் வலுப்படுத்துவோம்.
Advertisement
Advertisement
இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகியவை ஜனநாயக விழுமியங்கள், மக்களுக்கிடையிலான வலுவான பிணைப்புகள் மற்றும் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இணைக்கப்பட்ட இயல்பான கூட்டாளிகளாகத் திகழ்கின்றன.
இந்தியா - பெல்ஜியம் இடையிலான ஒப்பந்தங்கள் லட்சியம் மிக்க புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
வணிகம், பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல், கனிமங்கள், செமிகன்டக்டர், ஆய்வு மற்றும் திறமை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் ஆலைகளின் மீதான முதலீடு உள்பட அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இருதரப்பு வணிகமும் இரட்டிப்பாக்கப்படும்.
நமது நாட்டு மக்களுக்குப் பெரும் செழிப்பையும் வாய்ப்புகளையும் அளிப்பதற்கு இந்தியா-பெல்ஜியம் இடையிலான கூட்டுறவானது மிகச் சாதகமான நிலையில் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
India, Belgium Target Doubling Bilateral Trade In Next 5 Years PM narendra Modi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.