FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர், அவரது மகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி மற்றும் அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா ஜார்கிஹோலி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை குறித்து...

9 செப்டம்பர் 2026, 11:53 am IST
கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி - படம்: ஏஎன்ஐ
பகிர்:

பெங்களூரு: கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி(64), அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா ஜார்கிஹோலி மற்றும் சிலரின் வீடுகள் உள்பட 18 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், டாலர்ஸ் காலனி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி வீடு உள்பட சுமார் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், அமைச்சரின் மகளும் சிக்கோடி மக்களவைத் தொகுதி உறுப்பினரான பிரியங்கா ஜார்கிஹோலியின் வீடுகளிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 24- இல் பெலகாவியில், சதீஷ் ஜார்கிஹோலியின் மைத்துனரும் கலால் துறை கூடுதல் ஆணையருமான ஒய். மஞ்சுநாத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டன.

அப்போதைய சோதனைகள், மதுபான உரிமம் தொடர்பான லஞ்சம் மற்றும் சந்தேகத்திற்குரிய பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நடைபெற்றன.

தற்போதைய சோதனைகள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் பரிமாற்றம் தொடர்பானவை என்றும், பணப் பரிமாற்றத்தின் தடத்தைக் கண்டறியும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

summary

The Enforcement Directorate on Wednesday raided premises linked to Karnataka PWD minister Satish Jarkiholi, his MP daughter Priyanka Jarkiholi and some others as part of an investigation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments