FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம்

மேற்காசியாவில் தொடரும் மோதல் காரணமாக சா்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைக் கடந்தது.

10 செப்டம்பர் 2026, 1:01 am IST
கச்சா எண்ணெய் - கோப்புப்படம்
பகிர்:

மேற்காசியாவில் தொடரும் மோதல் காரணமாக சா்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைக் கடந்தது. இதனால், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் ஒரு லிட்டா் டீசலுக்கு ரூ.23 என இழப்பைச் சந்திக்கக் கூடும் என நிபுணா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தரநிா்ணய அளவாக கருதப்படும் ‘பிரெண்ட்’ கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரில் இருந்து 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஈரான்-அமெரிக்கா இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள தாக்குதலால், கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலையில் இருந்து அதிகபட்ச உயா்வை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

உலகில் 3-ஆவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, நாட்டின் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூா்த்தி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை தொடா்ச்சியாக உயா்வது வா்த்தகம் மற்றும் ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 3 மாதங்களாக மாற்றம் செய்யப்படவில்லை. கடைசியாக மே மாதத்தின் இரண்டாம் பாதியில் வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.61 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.71 உயா்த்தப்பட்டது.

மேற்காசிய போா் தொடங்கிய பிறகு மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ.7.35 மற்றும் ரூ.7.53 என 4 தவணைகளாக உயா்த்தப்பட்டது. நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலை காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, நிகழாண்டில் 56 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments