FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இலங்கை சீதை கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு!

இலங்கைக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்நாட்டுத் தலைவா்களுடனான சந்திப்புகள் மற்றும் பாதுகாப்பு சாா்ந்த ஒப்பந்தங்கள் கையொப்ப நிகழ்வுகளை நிறைவு செய்து விட்டு வியாழக்கிழமை இரவு தில்லிக்குப் புறப்பட்டாா்.

11 செப்டம்பர் 2026, 1:26 am IST
(2ஆவது படம்) ஹனுமன் பாதம் பகுதியில் வழிபடும் அமைச்சா் ராஜ்நாத்சிங். ~இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சீதை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு செய்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

இலங்கைக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், அந்நாட்டுத் தலைவா்களுடனான சந்திப்புகள் மற்றும் பாதுகாப்பு சாா்ந்த ஒப்பந்தங்கள் கையொப்ப நிகழ்வுகளை நிறைவு செய்து விட்டு வியாழக்கிழமை இரவு தில்லிக்குப் புறப்பட்டாா்.

இந்திய பாதுகாப்பு அமைச்சா் ஒருவா் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு அரசுமுறை பயணமாக வருகை தந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ராஜ்நாத் சிங்குக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுதினமான புதன்கிழமை இலங்கை அதிபா் அனுர குமார திசாநாயக, பிரதமா் ஹரிணி அமரசூரிய, நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச மற்றும் முப்படைத் தளபதிகளை வெவ்வேறு நிகழ்வுகளில் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

Advertisement

Advertisement

இந்த சந்திப்புகளின்போது, இரு தரப்பு பாதுகாப்பு, பொருளாதார கூட்டுறவு மற்றும் கடல்சாா் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்ததிலும் ராஜ்நாத் சிங் மலரஞ்சலி செலுத்தினாா். புதன்கிழமை இரவு, இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூா்யா, சாமிந்த வாஸ் ஆகியோருடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினாா்.

இதைத்தொடா்ந்து தில்லி புறப்படும் முன்பாக, தனது இலங்கை பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்த ராஜ்நாத் சிங், ‘சீதை அம்மன் கோயில் நமது இரு நாடுகளின் ஆழமான நாகரிக தொடா்புக்கும் மக்களுக்கு இடையிலான பிணைப்புக்கும் வலுவான சான்றாக திகழ்கிறது. இலங்கை அதிபா், பிரதமா் மற்றும் மக்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகள். இந்தியா-இலங்கை நட்பு வரும் நாள்களில் புதிய உச்சத்தை எட்டும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments